இதச் சொன்னா நம்மல அடிப்படைவாதின்னு சொல்லுவாய்ங்க..

ஹிஜாபே பெண்களுக்கு கண்ணியத்தையும்
பாதுகாப்பையும் தருகிறது!

இதச் சொன்னா நம்மல அடிப்படைவாதின்னு
சொல்லுவாய்ங்க..

உலக நடப்ப பார்க்கலாம்..

சமீபத்தில் YouTube ன் SorteddTv என்ற
சேன்னல் டெல்லியில் ஒரு ஆய்வை
மேற்கொண்டது.

அரைக்கால் ட்ரவுசரும் வெள்ளைச்
சட்டையும் அணிந்த ஒரு மாடர்ன்
இளம்பெண்ணை டெல்லியின் பரபரப்பான
வணிக வளாகங்களிலும் மக்கள் நடமாட்டம்
அதிகமாக உள்ள பகுதிகளிலும்
நடக்கவிட்டிருக்கிறார்கள்.

அடுத்து நடந்தது இதுதான்..

வயது வித்தியாசமின்றி பல்வேறு
ஆண்கள் அந்த இளம்பெண்ணை ஒருவித
இச்சையுடன் திரும்பிப் பார்த்துவிட்டு
கடந்து சென்றிருக்கிறார்கள்.
இதில் ஏழை பணக்காரன் என்றில்லாமல்
பல்வேறு பின்புலம் கொண்ட ஆண்களும்
இதையே தான் செய்திருக்கிறார்கள்.

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால்,
தன் மனைவியுடனோ  அல்லது தன் காதலியுடனோ
ஜோடியாக சென்ற ஆண்கள் கூட அந்த இளம்பெண்ணை  பார்த்து ரசித்து விட்டுத்தான்
கடந்திருக்கிறார்கள்.

சிலர் இன்னும் அப்பட்டமாக,
வெட்கமில்லாமல் திரும்பி நின்று
அந்தப் பெண்ணின் கால்களை வெறித்துப்
பார்த்துவிட்டு சென்றிருக்கிறார்கள்.

10 நிமிடத்தில் அந்தப் பெண்
21 முறை ஆண்களால் பார்க்கப்பட்டிருக்கிறாள்
என்று அந்த ஆய்வில் மூலம்
கணக்கிட்டிருக்கிறார்கள்.

இந்த ஆய்வை மையப்படுத்தி இந்த
நிலையை நாம் எவ்வாறு மாற்றலாம்?
இதற்கு என்ன தீர்வு? என NDTV
தனது இணையதளத்தில்
வாசகர்களிடம் கருத்து கேட்டுள்ளது.

இதற்கு ஒரே தீர்வு தான்..

"பெண்கள் ஹிஜாபை பேணிக்கொள்ள
வேண்டும்
ஆண்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள
வேண்டும்"

Comments

Popular Posts