ஆத்மானந்தங்கள்

நமக்காக மட்டுமே நாம் வாழும்போது வாழ்வென்பது எளியதாகவும் குறுகியதாகவுமே தோன்றுகிறது. நம் வாழ்வு தொடங்கிய புள்ளியிலிருந்து நம் ஆயுள் முடியும் புள்ளியோடு அது வரையறுக்கப்பட்டுவிடுகிறது.

ஆனால் பிறருக்காக, ஒரு சிந்தனைக்காக நாம் வாழும் போது அந்த வாழ்வு ஆழமும் நீளமும் கொண்டதாக மாறுகிறது. மனித இனத் தோற்றத்திலிருந்து ஆரம்பித்து இப்பூமியைவிட்டு நாம் விடைபெற்ற பிறகும்கூட அது நீள்கிறது.

இது வெறும் அனுமானமன்று. ஏனெனில், இந்த அமைப்பிலான வாழ்வு பற்றிய பார்வை நமது நாள்களையும் மணிகளையும் நிமிடங்களையும் பன்மடங்காக்குகிறது. உண்மையில் ஆயுள் நீட்சி என்பது வயதின் எண்ணிக்கையால் தீர்மானிக்கப்படுவதல்ல. உணர்வுகளின் திருப்தியில்தான் அது தீர்மானிக்கப்படுகிறது.

யதார்த்தவாதிகள் இதனைக் கற்பிதம் என்பர். ஆனால் அவர்கள் வைத்திருக்கும் பல யதார்த்தப் பெறுமானங்களை விட இது சிறந்த யதார்த்தமே.

சையித் குதுப் | ஆத்மானந்தங்கள் | சீர்மை

Comments