உப்பு டூத்பேஸ்ட் வெளம்பரம்!

கோல்கேட் வெளம்பரத்துல வர்ற மாதிரி
என் வீட்டுக்குள்ள என் அனுமதி
இல்லாம கதவ ஒடச்சுகிட்டு அந்த
கோல்கேட் கம்பெனியோட எம் டி யே வந்து
"உங்க டூத் பேஸ்ட்டுல உப்பு இருக்கா?" னு
கேட்டா, நான் இல்ல னு சொல்ல மாட்டேன் !

"சோத்துல உப்புப் போட்டுத்தான
சாப்பிடுறீங்க.. இப்படி கதவ ஒடச்சுகிட்டு
உள்ள வர்றீங்களே.. அறிவில்லையா?" னு
கேப்பேன்!

ஒங்க உப்பு டூத்பேஸ்ட் வெளம்பரம்..
முடியலடா சாமி!

டூத்பேஸ்ட்டுல எதுக்குடா உப்பு?
உப்பும் செங்காங்கட்டியும் தான்டா
அந்தக் காலத்துல டூத் பேஸ்ட்டே!

Comments

Popular Posts