பிரியாணி மட்டும்தான் ரம்ஜான் பண்டிகையா!?

ரம்ஜான் பண்டிகை என்றவுடன்
"பிரியாணி" மட்டுமே உங்கள் நினைவில்
வந்துபோகின்றதா...

இதையும் கொஞ்சம் தெரிந்து
கொள்ளுங்கள் நண்பர்களே!

ஃபித்ரா

ரம்ஜான் பெருநாளன்று எவரும்
பசி பட்டினியுடன் இருக்கக் கூடாது
என்பதற்காக இறைவனால் ஏற்படுத்தப்பட்ட
ஒன்றுதான் ஃபித்ரா எனும் பெருநாள் தர்மமாகும்!

அதாவது ரம்ஜான் பெருநாளுக்கு
சில நாட்களுக்கு முன்பாகவே
ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண்ணிடமிருந்தும்
ஒரு குறிப்பிட்ட தொகை தர்மமாகப் பெறப்படும்.

ரம்ஜான் பெருநாளுக்கு புத்தாடை கூட
எடுக்க வசதியில்லாத, நல்ல உணவு கூட
சாப்பிட வழியில்லாத ஏழைகள்
அனாதைகள், விதவைகள், கணவனால்
கைவிடப்பட்ட பெண்கள், பிள்ளைகளால் கவனிப்பாரற்றுக் கிடக்கும்
பெற்றோர்கள் போன்றவர்களுக்கு
அந்தத் தொகையை பணமாகவோ பொருளாகவோ
ரம்ஜான் பண்டிகைக்கு முன்னரே
பிரித்துத் தரச் சொல்கிறது இஸ்லாம்!

மற்ற எல்லோரையும் போலவே
மகிழ்ச்சியாக எந்தக் குறையும்
இல்லாமல் அவர்களும் புத்தாடை தரித்து நல்லுணவு உண்டு பெருநாளைக் கொண்டாட
வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டதே
ஃபித்ரா எனும் பெருநாள் தர்மமாகும்!

வெறும் பிரியாணி மட்டுமே ரம்ஜான்
பண்டிகை கிடையாது சகோதரர்களே!

பிரியாணியைத் தாண்டியும் பல நல்ல
விஷயங்களை உள்ளடக்கியதுதான்
ரம்ஜான் பண்டிகை!

சொல்லப்போனால் ரம்ஜானுக்கும்
பிரியாணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!

வெறுமனே பிரியாணி பிரியாணி என்று
சொல்லிச் சொல்லியே ஈகைப் பெருநாளை
தயவுசெய்து கொச்சைப்படுத்தாதீர்கள் சகோ!

Comments

Popular Posts