க்ளீன் இன்டியா! சாத்தியமா?

அரசியல் இல்லாத க்ளீன் இன்டியா திட்டம் நல்ல
விஷயம் தான். வரவேற்கப்பட வேண்டியதும் கூட.

ஆனால் சாத்தியமா? சாத்தியம் தான்!

ஆனால் அதற்கு முன்னால் இதையெல்லாம் கவனத்தில்
கொள்வது நல்லது.

» பான்பராக்கை தடை செய்யாத வரை, கண்ட இடங்களில்
'புளீச்' புளீச்' என்று துப்பிக் கொண்டே தான்
இருப்பார்கள்.

» சிறுநீர் கழிப்பதற்கான ஒழுங்குமுறைகளை சிறுவயது
முதலே கற்றுத்தரப்படாத வரை, கண்ட இடங்களில் காலைத்
தூக்கிக்கொண்டு தான் நிற்பார்கள்.

» கிராமப்புறங்களில் தண்ணீர் வசதியுள்ள கழிப்பறைகள்
கட்டமைக்கப்படாத வரை, சாலையோரங்கள் தான் இரவுநேரக்
கழிப்பறைகள்.

» பீடி, சிகரெட்டுகளை தடை செய்யாத வரை, காற்றில் நஞ்சை
கலந்துகொண்டே தான் இருப்பார்கள்.

» குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சாக்கடைகள்
தூர்வாரப்படாத வரை, மழைக்காலங்களில் ஊரே
சாக்கடையில் தான் மிதந்து கொண்டிருக்கும்.

இதேபோல இன்னும் நிறைய இருக்கின்றன. ஆனால் இதெல்லாம்
இந்த மோடி சர்க்காருக்குத் தெரியுமா? அல்லது
உரைக்குமா?

க்ளீன் இன்டியா என்றால், சாலையில் கசங்கிக் 
கிடக்கும் காகிதங்களை எடுத்து அதை குப்பைத்
தொட்டியில் போடுவது என்று பலர் நினைக்கின்றனர்.
ஆனால் கேட்பாரற்று சாலைகளில் சுற்றித்திரியும்
ஆடு மாடுகள் இடும் சாணங்களை யார் அள்ளுவது?
அவைகள் காய்ந்து கருவாடாகும் வரை அங்கேயே தான்
கிடக்கும். ஆனால் மிஸ்டர் மோடி 'க்ளீன் இன்டியா'
என்ற ஒற்றை வாசகத்தை சொல்லிவிட்டு இன்னொரு
நாட்டிற்கு வெளிநாட்டுப் பயணம் சென்றுவிடுவார்.

இப்படி நிறைய இடியாப்பச் சிக்கல்கள் நிறைந்த
விஷயத்தில், வெறுமனே வெத்து வாய்ஜாலங்கள்
காட்டிக் கொண்டிராமல் விவேகமாக பக்கா பிளானோடு
செயலில் இறங்கினால் கெத்து காட்டலாம்!

Comments

Popular Posts