பெரியாரும் பெரியாரிஸ்ட்டுகளும்!


இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து' என்று சொன்ன
பெரியார் எங்கே., இஸ்லாமிய மார்க்கத்தையும் நபிகள்
நாயகத்தையும் இழிவான வார்த்தைகளில் அர்ச்சனை
செய்யும் பெரியாரிஸ்ட்டுகள் எங்கே?

எந்தவொரு காலகட்டத்திலும் பெரியார் அவர்கள்
இஸ்லாமிய மார்க்கத்தையும் நபிகள் நாயகத்தையும்
இழிவான சொற்கள் கொண்டு விமர்சித்ததாக
கேள்விப்பட்டதே இல்லை!

ஆனால் இன்று, 'நான் பெரியார் வழியில் வந்தவன்/ள்'
'நான் ஒரு பெரியாரிஸ்ட்' என்று பீற்றிக் கொள்ளும்
சில பிற்போக்குவாதிகள் நபிகள் நாயகத்தை
ஒருமையில்  வசைபாடிக் கொண்டிருக்கிறார்கள்!

இந்த ஒரு செயலே போதும் நீங்கள் பெரியாரிடமிருந்து
எவ்வளவு தூரம் அந்நியப்பட்டு இருக்கிறீர்கள்
என்பதற்கு சான்று!

முதலில் பெரியாரை முழுமையாக படியுங்கள்!
பின்பு பெரியாரிஸ்ட் என்று சொல்லிக் கொள்ளுங்கள்!

உங்கள் சொற்பிரயோகமே உங்களைக் காட்டிக்
கொடுத்துவிடும், நீங்கள் பெரியாரிஸ்ட்டா அல்லது
பெரியாரிஸ்ட் என்ற போர்வையில் ஒளிந்திருக்கும்
பிற்போக்குவாதியா என்று!

Comments

Popular Posts