இது என்ன மாதிரியான கேயாஸ் தியரி என்று தெரியவில்லை!

இது என்ன மாதிரியான கேயாஸ் தியரி
என்று தெரியவில்லை!

அந்தா இந்தா என்று கிட்டத்தட்ட இரண்டு
வருட இழுத்தடிப்பிற்குப் பின்பு
ஒருவழியாக எனக்குப் பிறப்புச் சான்றிதழ்
கொடுத்து விட்டார்கள்.

விழிப்புணர்வின்மையால் தங்கள் குழந்தைகளின்
பிறப்பை பதிவு செய்யத் தவறிய அல்லது தவறுதலாக
தேதி மாற்றிப் பதிவு செய்த பெற்றோர்களை
அலையோ அலையென்று அலைய வைக்கிறார்கள். அதுவே
1989 க்குப் பின்பு பிள்ளைகளைப் பெற்ற
பெற்றோர்களை இன்னும் நிறையவே அலைய வைக்கிறார்கள்.

ஒரு பிறப்புச் சான்றிதழ் வாங்குவதற்கு இவ்வளவு
நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்தி வைத்த அந்த
புண்ணியவான் யாரென்று தெரியவில்லை.

1990 ல் எனது பிறப்பை கவனக்குறைவால் பதியத
தவறிவிட்ட எனது பெற்றோரை 24 வருடங்கள் கழித்து
இப்போது அழைக்கழிப்பது என்ன மாதிரியான கேயாஸ்
தியரி என்று தெரியவில்லை.

ஒன்றிரண்டு களைகளை எடுப்பதற்காக பல நெற்கதிர்களை
வாடி வதங்க வைத்து விடுகிறார்கள்!

எது எப்படியோ எனக்கு பிறப்புச் சான்றிதழ்
கிடைத்துவிட்டது.. என்ன., மழைக்குக் கூட கோர்ட்டுப்
பக்கம் ஒதுங்குனதில்.. ஆனா இந்தச் சான்றிதழ்
வாங்க கோர்ட்டுப் படி ஏற வச்சுட்டாய்ங்க!

Comments

Popular Posts