வற்றாத நீர் இருப்பு - வத்திராயிருப்பு - வத்றாப்

வற்றாத நீர் இருப்பு - வத்திராயிருப்பு - வத்றாப்

ஒன்னுமில்லங்க, இது எங்க கிராமத்துக்கு பக்கத்துல
இருக்குற ஒரு ஊரோட பேருதான்.  இந்த மூணு பேருமே
அந்த ஊரத்தான் குறிக்கும். ஒரு ஊரோட பேரு
எப்படிலாம் மருவியிருக்குனு பாருங்க!

இந்த ஊரப் பத்தி சொல்லனும்னா, இந்த ஊருதான் எங்க
கிராமத்துக்கு மினி டவுன் னு சொல்லலாம். எங்க
கிராமத்துக்கு மட்டுமில்ல, சுத்துப்பட்டில உள்ள
எட்டூரு கிராமங்களுக்கும் இந்த ஊருதான் டவுனு.
ஏன்னா ஆஸ்பத்திரி, பேங்கு, ஜவுளிக்கடை, பாத்திரக்
கடை, ஜெராக்ஸ் கடை லொட்டு லொஸ்கு னு எல்லாத்துக்கும்
நாங்க இங்கதான் வரனும்!

இந்த ஊருக்கு 'வற்றாத நீர் இருப்பு' னு எப்படி பேர்
வந்துச்சுன, ஏரி ஆறு குளம் குட்டை னு எப்பவுமே இந்த
ஊர்ல தண்ணீர் இருந்துக்கிட்டே இருக்குமாம்! அதனால
அந்தக் காலத்துல முன்னோர்கள் இப்படி பேர்
வச்சிருக்காங்க. அது அப்படியே மருவி 'வத்திராயிருப்பு'னு
மாறிடுச்சு. அதுவும் காலப்போக்குல அப்படியே மருவி
'வத்றாப்' னு சுருங்கிடுச்சு. பேருந்து அறிவிப்புப்
பலகை ல கூட இப்போ 'வத்றாப்' னு தான் பயன்படுத்துறாங்க.

கொஞ்ச காலத்துக்கு முன்னாடி வரைக்கும்
'வத்திராயிருப்பு' ங்கிற பதம் தான் பலராலும்
பயன்படுத்தப்பட்டது. ஆனா இப்போ அறவே இல்ல!
ஆனா முகநூல் ல 'வத்திராயிருப்பு'ங்கிற அடைமொழியோடு
'வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்' ங்கிற ஒருத்தவரு
கவிதை, ஜோக்ஸ் னு கலக்கிட்டு இருக்காரு!

அறிவியல் வளர வளர காலம் சுருங்கிடுச்சு னு சொல்வாங்க!
அதேபோல இங்க  ஆங்கிலம் வளர வளர தமிழ் சுருங்கிடுச்சு!

இதுல கொடும என்னன்னா , 'வத்றாப்' எனும் 'வற்றாத நீர்
இருப்பு'ல இப்போ வற்றிய நீர் இருப்பக் கூட பார்க்க
முடியல. எல்லா எடத்தையும் ப்ளாட் போட்டு
வித்துக்கிட்டு இருக்காய்ங்க!

Comments

Popular Posts