அயல் சினிமா - எஸ்.ரா

இந்த நூலில் எஸ்.ரா பல்வேறு அயல்தேச சினிமாக்களைப் பற்றி அலசியிருக்கிறார். அதில் `Spring Summer Fall Winter and Spring` என்றொரு கொரிய திரைப்படம் மிகவும் கவர்ந்தது. கொரிய திரைமேதை கிம் கி டக் -ன் இயக்கத்தில் 2003-ல் வெளிவந்த திரைப்படம்.

ஒரு ஏரி
சுற்றிலும் மலை
ஏரியின் நடுவே ஒரு மடாலயம்
ஒரு பௌத்த துறவி
ஒரு சிறுவன்
ஒரு படகு

இடையே வந்துபோகும் ஒருசில கதாபாத்திரங்கள். Casting அவ்வளவே!

இளவேனிற்காலம்
கோடைகாலம்
இலையுதிர் காலம்
குளிர்காலம்
மீண்டுமொரு இளவேனிற்காலம்

ஆகிய ஐந்து பருவங்களில் நகரும் கதை. ஜென் பௌத்தத்தை பற்றியதொரு குறியீட்டுப் படைப்பு. படம் முழுவதும் ஏரியின் நடுவே உள்ள அந்த பௌத்த ஆலயமும் பசுமையான இயற்கையும் நம்மை தியான நிலையில் இருந்ததைப் போன்றதொரு உணர்வை ஏற்படுத்துகிறது.

என் வாழ்நாளில் நான் பார்த்த ஆகச்சிறந்த படங்களில் ஒன்று ❤

அயல் சினிமா | எஸ். ராமகிருஷ்ணன்

Comments

Popular Posts