பள்ளிவாசல் தோப்பில் ஒருநாள்!

ரமலான் 2015

மஹாராஜபுரம், தம்பிபட்டி மற்றும்  கிருஷ்ணாபுரம் (MTK புரம்) ஆகிய மூன்றூர்களில் உள்ள சிறார்கள் மற்றும் இளைஞர்களுக்கான ஒருநாள் தர்பியா ப்ரோகிராம், எங்கள் ஊர் ஹிதாயத்துல் இஸ்லாம் நற்பணி மன்றத்தின் சார்பாக பள்ளிவாசல் தோப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காலையில் சிறுவர்களுக்கான வார்த்தை விளையாட்டுப் போட்டிகள் மற்றும் க்விஸ் ப்ரோகிராமை அழகாக தொகுத்து வழங்கினார் அன்பு நண்பர் அப்துஷ் ஷுக்கூர் ( Abdus Sukkoor ).

மக்கள் சோர்வுறாமலிருக்க, சென்னை வாழ் மகவை மைந்தன் முஹம்மது ரஃபீக் ( Shoba Rafiq ) அவர்களால் எலுமிச்சை ஜூஸ் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.

லுஹர் தொழுகைக்குப் பின்பு சிறு சொற்பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறப்புப் பேச்சாளராக, இமாமத் பணியிலிருந்து முழுமையாக விலகி தற்போது முழுக்க முழுக்க விவசாயம் செய்து கொண்டிருக்கும் 'ஜாஃபர் ஹஜ்ரத்' அவர்களை அழைத்திருந்தோம். அவருடைய சொற்பொழிவிலிருந்து சில..

'தலித்களுக்கு போராடியவர்களாக அம்பேத்கர் மற்றும் பெரியார் போன்றவர்களை நம்முடைய பாடப் புத்தகத்தில் படித்திருப்போம். ஆனால் தலித்களுக்காக முதன்முதலில் 1400 வருடங்களுக்கு முன்பே போராடியவர் முஹம்மது நபி (ஸல்). உதடுகள் தடித்த கருப்புநிற நீக்ரோ தலித் 'பிலால்' அவர்களை கஃபாவின் மீதேறி பாங்கு சொல்லச் சொன்னவர்கள் முஹம்மது நபி. ஆனால் அவர்கறைப் பற்றி எந்த பாடப்புத்தகத்திலும் குறிப்பிடப்படவில்லை.

இதேபோல பெண்களுக்கான சொத்துரிமை, மறுமணம் போன்ற விஷயங்களுக்காக 1400 வருடங்களுக்கு முன்பே போராடியது மட்டுமல்லாது உரிமையும் பெற்றுத்தந்தவர் முஹம்மது நபியவர்கள்!'

இவ்வாறாக அவருடைய சொற்பொழிவு மிகச்சிறப்பாக இருந்தது.

சொற்பொழிவிற்கு பின்பு, க்விஸ் ப்ரோகிராமில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன. பரிசுப்புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கிய அன்பு மச்சான் சிக்கந்தர் ( Sikkandhar Badhusha ) மற்றும் தம்பிபட்டி பள்ளிவாசல் இமாம் ஜமீல் ஹஜ்ரத் அவர்களுக்கும் ஜஸாக்கல்லாஹ்!

பின்பு எல்லோருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மிக அருமையாக சமையல் செய்து கொடுத்த எங்கள் ஊர் SDPI கிளைத் தலைவர் சித்தீக் மற்றும் மகவை மைந்தன் ஷேக் முஹம்மது ஆகியோருக்கும் நன்றிகள் பல!

மேலும் சிறப்பு விருந்தினர்களாக, ஹிதாயத்துல் இஸ்லாம் நற்பணி மன்றத் தலைவர் 'ஷம்சுத்தீன்', ஊருக்காக அயராது உழைக்கும் அண்ணன் 'ஜாஹீர் உசேன்', தம்பிபட்டி பேஷ் இமாம் ஜமீல் ஹஜ்ரத் மற்றும் மூஸா ஹஜ்ரத் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

மலையடிவாரத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் தோப்பில் மாந்தோப்பின் நிழலில் ஒரு ரம்மியமான இயற்கைச் சூழலில் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

அல்ஹம்துலில்லாஹ்!

Comments

Popular Posts