மொஹமெட் (Mohamed)


ஒரு பெயர் ஆங்கிலேயனால் எப்படி
உச்சரிக்கப்படுகிறதோ/எழுதப்படுகிறதோ,
அப்படியே எல்லோரும் பின்பற்ற ஆரம்பித்து
விடுகிறார்கள். இதில் முஸ்லிம்களும்
விதிவிலக்கல்ல.

முஹம்மத் ( محمد ) என்ற அழகான அரபிமொழிப் பெயரை
ஆங்கிலேயன் மொஹமெத் (Mohamed) என்று
உச்சரித்து/எழுதி மாற்றிவிட்டான். இன்றுவரை
அதுவே வழக்கமாக இருக்கிறது.

பத்தாம் வகுப்பு வரை என்னுடைய பெயரும்
ஆங்கிலத்தில் 'மொஹமெத் யாஸிர்' (Mohamed Yasir) தான்.
தமிழில் தான் 'முஹம்மத் யாஸிர்'.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் போது எங்கள்
பள்ளியில் (இலாஹி ஓரியண்டல் அரபி உயர்நிலைப்பள்ளி,
கம்பம்)கொடுத்த  தேர்வறைச் சீட்டிலும் (Hall Ticket)
பள்ளி மாற்றுச் சான்றிதழிலும் (Transfer Certificate)
என்னுடைய பெயரை 'Muhammad Yasir' என்று அவர்களாகவே திருத்தி எழுதிக் கொடுத்தார்கள்.

எனக்கு மட்டுமல்ல, என்னுடன் படித்த 'முஹம்மத்'
என்ற பெயர் கொண்ட மற்ற என் பள்ளித் தோழர்களான
Muhammadd Muzammil, Muhammad Haaris, Sheik Muhammad
மற்றும் இன்னும் சிலருக்கும் திருத்தம் செய்து
கொடுத்தார்கள்.

எங்கள் பள்ளி அரபியை முதன்மைப் பாடமாகக் கொண்ட
பள்ளி என்பதால் அவர்களாகவே முன்வந்து இதைச்
செய்து கொடுத்தார்கள். மற்ற பள்ளிகளில் இது
வாய்ப்பில்லை.

எனவே உங்கள் குழந்தைகளை முதல் வகுப்பில்
சேர்க்கும் போதே இதை கவனத்தில் கொள்வது
நல்லது!

Comments

Popular Posts